![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/04/19/b2.jpg?itok=nm3i24ma)
கவர்ந்திழுக்கும் கண்களும் பேசும் பேரழகு பெண்மை...
நடிப்பில் நவரசங்களை காட்டுவதில் தனி திறமை...
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் தமிழச்சி, வசனங்களில் உச்சரிப்புகளே அதற்கு பெரும் சாட்சி, இன்ஸ்டாகிராமில் இறங்கி கிறங்கடிக்கும் மங்கை, இவள் வெண்ணிற நிலவுக்கே தங்கை... என வர்ணிக்க துாண்டும் 'ஸ்மார்ட்' நடிகை சபிதா ராய் மனம் திறக்கிறார்.
துணை நடிகையான அம்மா பொள்ளாச்சி பிரேமா பிரபல தமிழ் நடிகர்களுடன்80படங்கள் நடித்தவர். நானும் சிறுவயதில் அம்மா உடன் மேடை நாடகம், 'மிலிட்ரி' என்ற படத்தில் நடிச்சிருக்கேன். பிறகு திருமகள், கோலங்கள், அத்தி பூக்கள், இளவரசி, வாணி ராணி மெகா சீரியல்களில் நடித்து இப்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளேன்.
இரும்புத்திரை, லீசா, நேர் கொண்ட பார்வை, தில்லுக்கு துட்டு பார்ட் 2, சூப்பர் டூப்பர், உள்பட 18படங்கள் நடிச்சிருக்கேன். விஜய்சேதுபதியின் 'மா மனிதன்', சசிகுமாரின் 'ராஜ வம்சம்', ஹாஸ்டல், ஸ்ரீகாந்தின் 'எக்கோ' ரிலீஸ்க்கு வெயிட்டிங்...
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் மா மனிதன் படத்தில் விஜய் சேதுபதி உடன் முக்கிய கேரக்டர், கதிர் இயக்கத்தில் 'ராஜ வம்சம்' படத்தில் கடலோர கவிதைகள் ரேகாவின் மகளாக நடித்துள்ளேன். இந்த படத்தில் மொத்தம் 40நடிகர்கள் நடித்துள்ளனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் டிக் டாக் நடிப்பு, லைவ் டாக் என ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறேன். இன்று சமூகவலை தள நடிகர்களும் சினிமா, சீரியல், வெப் சீரியஸ் வாய்ப்பு ஈஸியாக கிடைப்பது சிறு வயதில் இருந்து சினிமாவை நேசிக்கும் நடிகர்களுக்கு வருத்தம் தான்.
இதற்கு நேரத்தை தான் குறை சொல்ல வேண்டும். சினிமா ஒரு போர்க்களம். தினமும் போராடினால் என்றோ ஒரு நாள் வெற்றி கிடைக்கும். ஒரு படத்தில் ஒருவர் நடித்து பிரபலமானால் அவரை அடுத்த படங்களில் பயன்படுத்துகிறார்கள். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தந்தால் நானும் பிரபல நடிகை பட்டம் வாங்கி இருப்பேன்.