குஷ்பு:
பிரபல நடிகை ஒருவர் பாஜகவில் இருந்து திமுகவுக்கு தாவ காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. பல்வேறு மொழி படங்களில் ஹீரோயினாக ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் அந்த நடிகை. தமிழ்நாட்டில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பெரிய திரை தவிர்த்து சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமா தவிர்த்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். பாஜகவில் இருக்கும் அவர் பெரிய பெரிய கனவுகளுடன் அந்த கட்சியில் சேர்ந்தார். அனைத்து தெருக்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்றார். இந்நிலையில் தேசிய கட்சி வேண்டாம் என்று திமுகவில் சேர முடிவு செய்திருக்கிறாராம்.
இதையடுத்து முதல்வரை சந்தித்து பேசி திமுகவில் சேரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். நடிகை அந்த தேசிய கட்சியில் சேர்ந்ததை பார்த்தவர்கள் நிச்சயம் நீங்கள் திமுகவுக்கு வருவீர்கள் என்றார்கள்.
இந்நிலையில் நடிகை கட்சி தாவ நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்தவர்கள் நடிகை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சி தாவும் ஐடியா எதுவும் இல்லை என்கிறது நடிகை தரப்பு.