வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்? | தினகரன் வாரமஞ்சரி

வேதாளம் ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம்  அண்ணாத்த, சாணிக் காயிதம், அரபிக்கடலண்டே சிம்ஹம், வாசி ஆகிய படங்கள்  உள்ளன.  கீர்த்தி சுரேஷ் அஜித்குமார் நடித்த  வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி  நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி  உள்ளனர். வேதாளம் படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை  கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர்.

தெலுங்கு  வேதாளத்தில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க  வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மெஹிர் ரமேஷ் இயக்குகிறார்.  படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளனர்.

கீர்த்தி  சுரேஷ் ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக் காயிதம்’ படத்திலும்  நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ‘சர்காரு வாரி  பாட்டா’, மலையாளத்தில் அரபிக்கடலண்டே சிம்ஹம், வாசி ஆகிய படங்கள் கைவசம்  உள்ளன. 

Comments