டயலொக் ஆசி ஆட்டா மற்றும் இலங்கை கிரிக்கெட் இணைவில் ‘நமது வீரர்கள்’ T20 உலகக்கிண்ண பாடல் வெளியிடப்பட்டது | தினகரன் வாரமஞ்சரி

டயலொக் ஆசி ஆட்டா மற்றும் இலங்கை கிரிக்கெட் இணைவில் ‘நமது வீரர்கள்’ T20 உலகக்கிண்ண பாடல் வெளியிடப்பட்டது

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளர்களும் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுமாகிய டயலொக் ஆசிஆட்டா மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் இணைவில் 2021 ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியுள்ள T20 உலகக்கிண்ண போட்டியையொட்டிய ‘அபே கொல்லோ’ (தமிழில் - ‘நமது வீரர்கள்’) எனும் T20 உலகக்கிண்ண பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

டயலொக்கின் பிராண்ட் அம்பாஸிடர்களான பாத்தியா மற்றும் சந்துஷ் உட்பட ஒமாரியா, யோஹானி, சங்க தினெத், சஜித, சனுக்க, மாதவி மற்றும் சிறப்பு கலைஞர் ரோய் ஜெக்சன் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். ‘Triad’ எழுதியுள்ள இலங்கை கிரிக்கெட்டின் மேற்படி T20 உலகக்கிண்ண பாடலானது டயலொக் ஆசிஆட்டாவின் ஆதரவில் ஒவ்வொரு இலங்கையர்களினதும் வாழ்த்துகளை இலங்கை அணியினருக்கு தெரிவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண T20 தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியானது நமீபியா அணியுடன் ஒக்டோபர் 18 ஆம் திகதியும், அயர்லாந்து அணியுடன் ஒக்டோபர் 20ஆம் திகதியும், நெதர்லாந்து அணியுடன் ஒக்டோபர் 22ஆம் திகதியும் போட்டியிட்டன. மாபெரும் இறுதிப் போட்டியானது 2021 நவம்பர் 14ஆம் திகதியன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாய் நகரில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவரான கலாநிதி ஜயந்த தர்மதாஸ அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “ T20 உலகக்கிண்ண போட்டிக்கான பாடலை உருவாக்கியமைக்காக டயலொக் ஆசிஆட்டாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பாடலானது இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகத்தான மன உறுதியை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இலங்கை கிரிக்கெட் அணியானது கடந்த சில மாதங்களாக பல கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததுடன் பரீட்சார்த்த போட்டிகள் பலவற்றிலும் ஈடுபட்டதன் பயனாக இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு தகுந்த பலம்வாய்ந்த அணியொன்றை தேர்ந்தெடுப்பதற்கு அது பின்புலமாக அமைந்தது எனலாம்" என்றார்.

மேலும், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமாலி நாணயக்கார அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, “இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளர்கள் என்ற ரீதியில் T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு சகல இலங்கையர்களினதும் வாழ்த்துகளை இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பகிர்ந்து கொள்வதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து கொள்ளக் கிடைத்துள்ளமையையிட்டு டயலொக் மகிழ்ச்சி கொள்கின்றது. இலங்கை அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார்.

இலங்கையின் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பிரகாசிக்கச்செய்து வருகின்ற டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தசாப்தகால உத்தியோகப்பூர்வ அனுசரணையாளர்கள் என்ற ரீதியில் 2023ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக தனது அனுசரணையை வழங்கும்.

Comments