நவீன வசதிகள் கொண்ட புதிய தொகுதியை இணைத்துள்ள ICBT கம்பஸ் | தினகரன் வாரமஞ்சரி

நவீன வசதிகள் கொண்ட புதிய தொகுதியை இணைத்துள்ள ICBT கம்பஸ்

முன்னணி தனியார்துறை உயர்கல்வி சேவை வழங்குநரான ICBT கம்பஸ் கொழும்பு 4பகுதியிலுள்ள தனது பிரதான கம்பஸ் வளாகத்தில் நவீன வசதிகள் படைத்த புதிய தொகுதியை திறந்துள்ளது.

கடந்த மார்ச் 21ஆம்திகதி இந்த புதிய தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ICBT கம்பஸ் முகாமைத்துவ அங்கத்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இதர விருந்தினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இல. 36, கிரெஸ்டர் பிளேஸ், கொழும்பு 4எனும் முகவரியில் ICBT கொழும்பு கம்பஸ் வளாகத்தில் இந்த புதியதொகுதி அமைந்துள்ளதுடன், 14மாடிகளில் 80,000சதுரஅடி பரப்பை சர்வதேச தரங்களுக்கமைய நிறுவியுள்ளது.

புதிய தொகுதியில் 350இருக்கைகளுடனான அடுக்கு இருக்கை அரங்கு (amphitheater), சிவில் பொறியியல் ஆய்வு கூடங்கள், எந்திரவியல் பொறியியல் ஆய்வுகூடங்கள், உயிரியல் மருத்துவ பொறியியல் ஆய்வுகூடங்கள், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடங்கள், வாகன ஆய்வுகூடங்கள் மற்றும் மெகாட்ரொனிக்ஸ் (Mechatronics) ஆய்வுகூடங்கள் போன்றன அடங்கியுள்ளன. மேலும், புதிய தொகுதியில் மாணவர்களுக்கு தனித்தனியாகவும் குழுக்களாகவும் பயிலக்கூடிய வசதிகளை வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் 9 கிளைகளைக் கொண்டுள்ள ICBT கம்பஸ், டிப்ளோமா, உயர் டிப்ளோமா, இளமானி மற்றும் மாஸ்டர்ஸ் நிலை தகைமைகளை வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், மொழிகள், விஞ்ஞானங்கள், வலையமைப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு, உளவியல், டேட்டா விஞ்ஞானம், தாதியியல் மற்றும் பொறியியல் போன்ற பிரிவுகளில் வழங்குகின்றது. இந்தக் கல்வியகத்தினால் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகைமைகள் ஐக்கிய இராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற Cardiff Metropolitan University, Liverpool John Moor University, Birmingham City University மற்றும் University of Sunderland மற்றும் அவுஸ்திரேலியாவின் RMIT ஆகியவற்றுடன் இணைந்து வழங்குகின்றது.

Comments