![கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, செயலாளர், நிதி, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/04/30/f10-1.jpg?itok=j8jSEivF)
போல் வில்சன்
அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற ரீதியில் எமது நாட்டுக்கு தகவல் அறியும் சட்டம் ஏன் அவசியமானது?
அபிவிருத்தி அமைந்துவரும் நாடு அல்லது அபிவிருத்தி அடைந்த நாடு என்ற ரீதியில் அந்நாட்டிலுள்ள குடிமக்களுக்கு நாட்டின் பிரதானிகளின் செயற்பாடுகள் குறித்து அறிவதற்கு உரிமை உண்டு. ஆனாலும் மக்களுக்கு இதுகுறித்து தெளிவு இருக்கிறதா என்பது குறித்து சந்தேகம்தான்.
மேற்கத்திய நாடுகளில் மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு உண்டு. அதாவது மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தியே ஒரு அரசு இயற்குகிறது. அரசை இயக்கும் அரசியல்வாதிகளும் மக்களின் பணத்தின் ஊடாகவே போஷிக்கப்படுகிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் இயற்றும் திட்டங்கள் செம்மையாக நடைபெறுகிறதா என்பதை, இச்சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியலாம்.
எமது நாட்டில் தகவல் அறியும் சட்டத்தின் அவசியம் குறித்து பிற்காலத்திலேயே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தகவல்களை அறிவதற்கு உரித்துடையவர் என்பது அடிப்படையான விஷயம்.
எமது நாட்டில் கடந்த எழுபது வருடங்களில் மக்களின் தேவைகளை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள ஆக குறைந்தளவான செயற்பாடு இதுவாகும். 1972 ஆம் ஆண்டு ஜனநாயக சோஸலிச குடியரசின் அரசியலமைப்பில் முதலாவது மக்களின் அடிப்படை உரிமை குறித்ததான சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்டன. இது பலன்தரக் கூடியதாக போதிய தெளிவு இருக்கவில்லை. ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்ைக குறித்து தெளிவான ஒழுங்கு விதிகள் இருக்கவில்லை. ஆனாலும் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமை குறித்ததான தெளிவான சட்டவிதிகள் உள்வாங்கப்பட்டன. இதனடிப்படையில் ஒருவரின் அடிப்படை உரிமை மறுக்கப்படும் பட்சத்தில் அவர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம். ஆனாலும் உயர் நீதிமன்றத்திற்கு போவதற்கு வசதிவாய்ப்புகளுடன் செலவிட நிதியும் இருக்க வேண்டும். எமக்கு ஒரு திறந்த உண்மையானாலும் அது இலகுவானதாக இருக்கவில்லை.
எமக்கு இருந்த இச்சிரமங்கள் தற்போதைய தகவல் அறியும் சட்டத்தினூடாக குறைந்துள்ளன. எளிமைபடுத்தப்பட்டிருப்பதாகவும் சொல்லலாம்.
ஒருவர் ஒரு தொழிலுக்காக நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித்த பின்னர் இந்த நேர்முகப் பரீட்சையில் அவர் சித்தியடைந்துள்ளாரா என்பதை அவர் விரும்பினால் அறிய முடியும். முன்பு அப்படியல்ல. நேர்முக பரீட்சையில் சித்தியடைந்துள்ளேனா என்பதை குறித்து வினவ பதில் கிடைக்கவும் செய்யலாம் கிடைக்காமலும் போகலாம். தகவல் அறியும் சட்டத்தினூடாக அப்படியல்ல. நான் ஒரு விண்ணப்படிவம் அனுப்பியுள்ளேன். அவ்விண்ணப்பத்துக்கு என்ன நடந்தது என்பதை பழைய முறைமையின் கீழ் அறிய முடியாது. ஆனால் தகவல் அறியும் சட்டத்தினூடாக மிகவும் இலகுவாக இலங்கையில் 800 மேற்பட்ட அரச நிறுவனங்கள் இயங்கினாலும் முன்பு அவற்றிலிருந்து ஒரு தகவலையும் அறிய முடியாது. தற்போது ஒரு கடிதம் அனுப்பினால் போதுமானது. தேவையான தகவலை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க தவறும் பட்சத்தில் கொடுக்க மறுப்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்க முடியும். இதுதான் தகவல் அறியும் சட்டத்தின் சிறப்பு. தகவல் கொடுக்காதவருக்ேக பிரச்சினை உருவாகும்.
முன்பு ஒரு அரச அதிகாரியிடம் தாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை தரும்படி கேட்டால் அவர் மறுக்கலாம். அல்லது விடயம் குறித்து கவலையின்றியிருக்கலாம். ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாகக் கேட்டால் அந்தந்த அதிகாரிகள் பதில் கூறியே ஆக வேண்டும். கடிதம் மூலம் தகவலை கேட்டால் இரண்டு வாரத்திற்குள் அவருக்குரிய பதில் அளித்தே ஆக வேண்டும். காலப்பகுதியில் மக்களுக்குக் கிட்டியிருக்கும் மிகவும் சாதகமான ஜனநாயக உரிமை இது என்று சொல்லலாம்.
எனினும் இச்சட்டத்தைப் பயன்படுத்தி சில துறைகள் தொடர்பிலான தகவல்களை அறிய முடியாது. நீதிமன்ற வழக்குகளின் செயற்பாடுகள் குறித்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து தகவல்கள் பெறமுடியாது. ஆனாலும் பொதுமக்கள் இவை குறித்து தகவல்கள் திரட்டுவது கிடையாது.
இச்சட்டம் பற்றி மக்கள் தற்போது படிப்படியாக விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். அரச அதிகாரிகளும் இத்தகவல் அறியும் சட்டத்தை வாசித்து செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். ஒவ்வொரு அரச காரியாலங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை அளிப்பதற்கு தகவல் வழங்கும் அதிகாரிகள் கடமையிலுள்ளனர். நிறுவனங்களில் அவ்விடத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அரச நிறுவனங்களில் தகவல் வழங்கும் அதிகாரிகளாக இதுவரை சுமார் 3000 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்க வேண்டுமா?
உள்ளூர் பயிற்சி அளிப்பது மிகவும் இலகுவானது. இதற்கான வர்த்தமானி பிரகடனம் மும்மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இதனை வாசித்தாலே போதுமானது. ஆனாலும் அரச அதிகாரிகள் இதுகுறித்து தெளிவான அறிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஓர் அரச ஊழியர் அவர் எத்தகைய பதவி வகிப்பவராக இருந்தாலும் அவரிடம் ஒருவர் தகவல் அறிய முற்படுகையில் வரை உதாசீனம் செய்யாது அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அரச ஊழியர்கள் இதற்கு கட்டுப்பட்டவர்கள். இதனால் அரச ஊழியராக பதவி வகிப்பவர்கள் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்ய முடியாது.
உதாரணமாக, நேர்முகப் பரீட்சையில் ஒருவர் சிறப்பாக தன் தகுதிகளை வெ ளிப்படுத்திய பின்னரும் நீங்கள் தான் சிறந்தவர். அப்பதவி வேறொருவருக்கு கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். முன்னர் உங்களுக்கு நேர்முகப் பரீட்சையின் போது என்ன நடந்து என்ற தகவலைப் பெறமுடியாது. ஆனால் தகவல் அறியும் சட்டத்தின்படி நாம் தகவல்களை வழங்க வேண்டியுள்ளதால் நடத்தை வெளியே சொல்லத்தான் வேண்டும். இச்சட்டம் ஒரு அரணாக இருப்பதால் இனிமேல் நேர்முகப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவரையே தெரிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் துஷ்பிரயோகங்கள், மோசடிகள் குறைந்து சீரான செயற்பாடு உருவாகும் என எதிர்பார்க்கலாம். பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் செல்வதற்கும் இச்சட்டத்தில் விதிகள் உண்டு.
அரச சேவைகள் துரிதமானதும் ஒழுங்காகவும் இயங்குகின்றனவா?
அரச சேவைகள் துரிதமாகவும், ஒழுங்காகவும் நடைபெற வேண்டும். மக்களும் அதனையே விரும்புகின்றனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காவிட்டால் மக்களுக்கு அதிருப்தி ஏற்படத்தானே செய்யும்? எனவே இது மக்களுக்கு உகந்த சட்டமூலமாகும்.
கடித மூலமாகவே தகவல்களைப் பெற முடியுமா?
ஆம், இதற்கான ஒரு படிவம் உள்ளது. அதனை நிரப்புக் கொடுத்தாலே போதுமானது. தேவையான தகவல்களை கொடுக்காவிட்டால் அதற்கான காரணத்தையும் கூற வேண்டும். உதாரணமாக தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்றால் அந்த விபரங்களை கொடுக்கமாட்டார்கள். அதேபோல் ஒரு நேர்முக பரீட்சை முடியும் முன்பே அதனை குறித்து விபரங்களை வெளியிடமாட்டார்கள். கொடுக்கப்படும் தகவல்கள் தெளிவாக இல்லாவிடத்து அதனை
(தொடர் 28ஆம் பக்கம்)
நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்யலாம். எமது தோட்டத்திலுள்ள ஒரு மரத்தை தறிக்க வேண்டும் என்ற ரீதியில் கிராம சேவகர்களிடம் அனுமதி கேட்டு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் கிடைக்காவிட்டால் ஒரு கடித மூலம் கோரிக்ைக விடுத்தால் அதற்குரிய பதில் உடனடியாகவே கிடைத்துவிடும். அரச அதிகாரிகள் பொறுப்பற்றவர்களாகவும், ஏதும் தெரியாதவர்களாகவும் இருக்க முடியாது என்கிறது இச்சட்டம். இச்சட்டம் மரத்தை வெட்டுவதற்கான அனுமதி கிடைக்கலாம் கிடைக்காமல் இருக்காமலும் போகலாம். ஆனால் சரியான பதில் கிடைக்கும் என்பது முக்கியமானது.
மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்ைககள் மேற்கொள்ளப்படுகின்றனவா?
ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது விழிப்புணர்வு கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. அத்துடன் அமைச்சு சார்ந்த நிறுவனங்களில் தகவல் அறியும் சட்டத்தை குறித்து விளக்கமளிக்கும் மாநாடுகள், கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இச்சட்ட மூலத்தை தெளிவுபடுத்தும் கூட்டங்களில் அரச அதிகாரி என்ற ரீதியில் நானும் கலந்து கொண்டுள்ளேன். அரச சேவையாளர்களாக 1.5 மில்லியன் பேர் கடமையாற்றுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் இச்சட்டத்தை அறிந்து வைத்திருக்கும் வகையில் நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகின்றன.
RTI வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வலைத்தளத்திற்குள் சென்று பார்வையிடலாம். தகவல் வழங்கும் அதிகாரிகளுக்கு கையேடு ஒன்று தயாரிக்கப்ட்டுள்ளது. இச்சட்டத்தை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தி, தகவல் வழங்கும் அதிகாரிகளின் அனுபவத்தையும் மற்றவர்களுடன் பகிரும்படி கோரியுள்ளோம்.
அரச நிறுவனங்களில் கேட்ட தகவல்கள் தரப்படாவிட்டால் அல்லது தாமதமானால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கு wed:www.rti.gov.lk சென்று முறைப்பாட்டு பத்திரத்தை தரவிறக்கம் செய்து அதனை நிரப்பி அனுப்பி வைத்தால் போதுமானது. இதனை அனுப்பும் போது ஒரு பிரதியை சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் ஆணையாளருக்கு அல்லது தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு அனுப்புதல் வேண்டும்.