கல்வி அமைச்சுடன் இணைந்து சர்வதேச கல்வி வாய்ப்பை வடிவமைக்கும் பிரிட்டிஷ் கவுன்சில் | தினகரன் வாரமஞ்சரி

கல்வி அமைச்சுடன் இணைந்து சர்வதேச கல்வி வாய்ப்பை வடிவமைக்கும் பிரிட்டிஷ் கவுன்சில்

 

இலங்கையில் சர்வதேச பாடசாலை விருதுகள் நிகழ்வின் இறுதி கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டிஆரச்சி மற்றும் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டின் சகல பாகங்களையும் உள்ளடக்கி, அரசாங்க பாடசாலைகளைச் சேர்ந்த 170 பாடசாலை அதிபர்கள் மற்றும் 340 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் போது பிரிட்டிஷ் கவுன்சில் பாடசாலை தூதுவர்களுக்கு விசேட கெளரவிப்புகள் வழங்கப்பட்டது.

கடந்த 13 வருடங்களில், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன கைகோர்த்து இயங்குவதுடன், பாடசாலைகளில் சர்வதேச பயிலல் மற்றும் ஒன்றிணைவு அனுபவத்தை ஊக்குவிக்கின்றன. பிரிட்டிஷ் கவுன்சில் சர்வதேச பாடசாலை விருது (ISA) என்பது பாடசாலைகளில் பன்னாட்டு ஒற்றுமை உணர்ச்சியின் எடுத்துக்காட்டான செயன்முறைகளை கொண்டாடும் வகையிலும், கெளரவிக்கும் வகையிலும் அமைந்த திட்டமாக அமைந்துள்ளது. 54 நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

சர்வதேச பாடசாலை விருது என்பது, சர்வதேச பாடசாலைகளுடன் இணைந்து புத்தாக்கமான வகையில் மாணவர்களுக்கு பயிலும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இதற்காக புத்தாக்க தொழில்நுட்பம், ஆக்கபூர்வமான தகவல் செயன்முறைகள் மற்றும் பயிலலுக்கான பிரயோக முறை போன்றன பயன்படுத்தப்படுகின்றன. பாடசாலைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் சர்வதேச பாடசாலை விருது அமைந்துள்ளது.

பாடசாலைகளுக்காக பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச கல்வி நிகழ்ச்சித்திட்டமான வகுப்பறைகளை இணைத்தல் என்பதன் ஒரு அங்கமாக சர்வதேச பாடசாலை விருதுகள் அமைந்துள்ளது. இளையவர்களுக்கு சர்வதேச ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேச மட்டத்தில் போட்டிகரத்தன்மை வாய்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் திறனை கட்டியெழுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதனூடாக தமது போதனா முறைகளில் பிரதான 21ஆம் நூற்றாண்டு திறன்களை உள்வாங்கி செயலாற்ற உதவுகிறது.

Comments