பேட்ட, காஞ்சனா 2 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக அதிகாரபபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர். லோக்கல் படம் வருகிற மே 1ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படமொன்றில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். மெரினா படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.