![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/04/colarticle-l-20181131512173744257000182222102_7211053_02082019_VKK_CMY.jpg?itok=TLRk3jMc)
உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல இந்தி நடிகையுமான சுஷ்மிதா சென், தன்னை விட 19 வயது குறைந்தவரை நவம்பர் மாதம் திருமணம் செய்ய இருக்கிறார்.
இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
அவர் பிரபல விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஷ்மிதாவுக்கு 43 வயது.
ரோமனுக்கு 24 வயது. ரோமனும் சுஷ்மிதாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். சுற்றுலா செல்லும் புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். தங்களுடைய உறவை அவர்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
ரோமன் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் என்பதால், தங்களுடைய தாய் திருமணத்துக்கு மகள்கள் தடை விதிக்க வில்லை. இதனால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவும், ரோமனும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் சுஷ்மிதா கையில் இருந்த மோதிரத்தை பார்த்து, இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என செய்தி பரவியது. ஆனால் சுஷ்மிதா ரோமன் திருமணம் நவம்பரில் நடக்கும் .