உங்களுக்கு நூறு வயதா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

உங்களுக்கு நூறு வயதா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்!

பிறப்பிற்கும் மரணத்திற்கும் இடையே சுழலும் சக்கரமே வாழ்க்கை. காலச்சக்கரத்தின் சுழற்சிக் காலம்தான் மனிதனது ஆயுளை நிர்ணயிக்கின்றது.

இவை இரண்டிற்கும் இடைப்பட்டதாகிய காலவெளியில் மனித வாழ்க்கை தொடர்கின்றது. பலருக்குக் குறுகியும், கூடியும் சிலருக்கு இவ்வெல்லையைத் தாண்டியும் செல்கின்றது. பிறப்பும் இறப்பும் தனிமனித விருப்பு வெறுப்பிற்கு ஏற்றபடி ஒருபோதும் நிகழ்வதில்லை என்கிறார் கே.கணேசமூர்த்தி.

எண்பத்து நான்கு வயதான அவர், தெல்லிப்பழையில் இருந்து முதியோர் சுகவாழ்வுக் கழகத்தை நடத்துவது மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள முதியோரின் விபரங்களைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு வருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் முதியோர் தினத்தையொட்டியதாக இந்தச் சஞ்சிகை வெளிவருகிறது. இதுவரை மூன்று நூல்களை வெளியிட்டுள்ள அவர், இந்தத் தடவை முதியோர் தினத்திற்கு நான்காவது சஞ்சிகையை வெளியிடவிருக்கிறார்.

இதில், நூறு வயதைத் தாண்டியவர்கள் உள்நாட்டில் எந்தப் பாகத்திலிருந்தாலும் விபரங்களைத் தந்தால், இந்தச் சஞ்சிகையில் வெளியிடத் தயார் என்கிறார் கணேசமூர்த்தி.

"யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் மகிழ்ச்சியாக 'வாழ்கிறார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு சொல்லொணாத்துன்பங்களை அனுபவித்துக் ெகாண்டிருக்கிறார்கள். இது வெளியுலகத்திற்குத் தெரிவதில்லை. இலங்கையில், சிறுவர்களுக்ெகன்றும் பெண்களுக்ெகன்றும் தனித்தனியான வைத்தியசாலைகள் இருக்கின்றன. ஆனால், முதியவர்களுக்ெகன்று எங்காவது வைத்தியசாலை இருக்கின்றதா? அதனை அமைத்துக் கொடுக்க அரசாங்கங்கள் முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தும் கணேசமூர்த்தி, கிரிக் ெகட்டில் நூறு ஓட்டங்கள் எடுத்தால், உலம் முழுவதும் ஊடகங்களில் பீற்றுகிறார்கள். ஆனால், நாங்கள் வாழ்க்ைகயில் சதம் அடித்தால் கண்டுகொள்கிறார்கள் இல்லையே என்று ஆதங்கப்படுகிறார்.

"பிறப்பினை மகிழ்வான சம்பவமாகப் பார்க்கும் மனிதர்கள், இறப்பினை அவ்வாறு பார்ப்பதில்லை. அது துயரம், வலி, வேதனை நிறைந்தது என்றே நோக்குகின்றனர். முதுமையில் மரணத்தை எண்ணிக் காலத்தைக் கழிக்ைகயில், அவர்கள் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் இரணம் மிகுந்தாகவே கழிகிறது. இன்றோ, நாளையோ, எப்போதோ? என ஏங்கியவாறு மரணப்போராட்டத்துடன் அவர்களின் வாழ்வு தொடர்கிறது.

தமது பிள்ளைகள், தாம் பழகிய சொந்தங்கள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை விட்டுவிட்டு நிரந்தரமாகப் பிரியப்போகிறோமே என்ற நினைவு, ஏக்கம், தவிப்பு அவர்கள் மனங்களில் சுழன்றடித்தபடி இருக்கும். பிறப்பில் தொடங்கும் வாழ்வியல் பயணமானது இறப்பின் எல்லைவரை நீளும்போது பல கட்டங்களைத் தாண்டியே பயணிக்கின்றது.

குழந்தைப் பருவம், விடலைப்பருவம், இனளமைப்பருவம், பேரிளமைப்பருவம், முதுமைப்பருவம் எனப் பலவாறாக மனித வாழ்வியற் கட்டங்கள் வகைப்படுத்தப்படுள்ளன.

இவ்வாழ்வியற் கட்டங்களில் இறுதியான கட்டமாகிய முதுமைப்பருவம் முக்கியமான கட்டமாக விளங்குகிறது. ஏனைய பருவங்களைப் போலல்லாமல், எண்ணற்ற பிரச்சினைகளையும் பாதிப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற பருவமிது.

முக்கியமாக உடலளவிலும் உள ரீதியிலும் குடும்ப, சமூக ரீதியிலும் முதியவர்கள் பல்ேவறுவிதமான பாதிப்புகளைஎதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, உளரீதியாக இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தான் அதிகம். இவ்விடயம் பற்றியதான புரிதலை இன்றைய தலைமுறை விளங்கிக்ெகாள்ள வேண்டும்.

மனித வாழ்வியலில் உடல் ஆரோக்கியத்தைக்காட்டிலும் உள ஆரோக்கியமே கூடியளவு செல்வதற்கு செலுத்தி நிற்கின்றது என்பதை இளையவர்களும் குடும்பத்தவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்தக் கழகம் என்று நமக்கு தெளிவுபடுத்துகிறார் கணேசமூர்த்தி.

அதேநேரம், இம்முறை வெளியாகவுள்ள நூலில் விபரங்களைப் பிரசுரிப்பதற்காக முதியவர்களைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்ெகாண்டுள்ளார். 100 வயதைத் தாண்டியவர்களும் 90 வயதைக் கடந்தவர்களும் தங்களின் விபரங்களுடன் புகைப்படத்துடன் கீழுள்ள முகவரிக்கு எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என்று திரு.கணேசமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

விசு கருணாநிதி

Comments