முதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

முதன்முறையாக ஆண்கள் துணையின்றி விண்வெளியில் நடந்த பெண்கள்

வரலாற்றிலேயே முதன்முறையாக விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் குழு என்ற பெருமையை நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இரு பெண் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.

இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இங்கு, சுழற்சி முறையில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில நேரங்களில் ஆய்வு மையத்திலிருந்து வெளியேறி, விண்வெளியில் மிதந்தபடி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.

ஆண்களின் துணையுடன் வீராங்கனைகளும் இந்த நடைபயணத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே பழுதான பேட்டரிகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றுவதற்கு கடந்த மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டபோது,  முதல் முறையாக, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணத்தை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இருப்பினும் விண்வெளி வீராங்கனைகள் அணியும் உடைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு, நேற்று நிறைவேறியது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகளாக கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மேர் ஆகியோர், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறி, அந்தரத்தில் மிதந்தபடி, பேட்டரி மாற்றுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் மூலம், முதன்முறையாக விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் குழு என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பெண்கள் குழு விண்வெளியில் மிதந்த காட்சியை, நாசா தனது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது. இதனிடையே, பெண்கள் குழுவிற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வரலாற்றிலேயே முதன்முறையாக விண்வெளியில் நடந்த முதல் பெண்கள் குழு என்ற பெருமையை நாசா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இரு பெண் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இங்கு, சுழற்சி முறையில் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சில நேரங்களில் ஆய்வு மையத்திலிருந்து வெளியேறி, விண்வெளியில் மிதந்தபடி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.

Comments