பெண்கள் மீது சுமத்தப்படும் சுகாதார துவாய்களுக்கான வரிச் சுமை | தினகரன் வாரமஞ்சரி

பெண்கள் மீது சுமத்தப்படும் சுகாதார துவாய்களுக்கான வரிச் சுமை

கடந்த வாரம் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் அதிகமாக பேசப்பட்ட விடயம் இலவசமாக சுகாதார துவாய்களை வழங்குவதாகும். தன்னை ‘பேட் மேன்’ என அறிமுகப்படுத்திய சஜித் பிரேமதாஸ அது தொடர்பாக டிவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த செலவுக்கு பதிலாக வேறு வளமான மாற்று தீர்வு கிடைக்கும் வரையில் இலவசமாக சுகாதார துவாய்களை வழங்கவுள்ளதாக டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். உண்மையில் பெண்களின் மாதவிடாய் நாட்களுக்கான சுகாதார துவாய்கள் உற்பத்தி தொடர்பில் பல பிரச்சினைகள் உள்ளன. அது அரசியல் கட்சிகளுக்கிடையே பிரபலமான விடயமாக காணப்படுகின்றது.

இவ்வருடம் மார்ச் மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்சவும் இதுபற்றி ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். நாட்டின் சனத்தொகையில் நூற்றுக்கு 52 வீதம் பெண்களானாலும் பெண்களின் மாதவிடாய் காலங்களில் 4.2 மில்லியன் பெண்களாலேயே அவற்றை விலைக்கு பெற்று பாவிக்கும் வசதியுள்ளது. இன்னும் அது அநேகமாக இலங்கை பெண்களுக்கு ஆடம்பரப் பொருளே. அதற்கான செலவை சாதாரண பெண்கள் செய்ய முடியாததற்கு அவ் உற்பத்தி நிறுவனங்களின் மீது இலங்கை விதித்துள்ள வரியே காரணமாகும். சுகாதாரத் துவாய்கள் மற்றும் யோனியில் உள்ளே செலுத்தப்படும் அதற்கு சமமான சுகாதார பாதுகாப்பு உபகரணம்) என்பவற்றிற்கு விதிக்கப்படும் வரி HS குறியீட்டால் குறிக்கப்படும். HS 96190010 கீழாகும். இந்த உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வட்டி வீதம் நூற்றுக்கு 62.6ஆகும். 2018 செப்டம்பர் வரை சுகாதார துவாய்களுக்காக அறவிடப்பட்ட வரி விகிதம் நூற்றுக்கு 101.2 ஆகும். இந்த வரி அமைப்பு கீழ்கண்ட வரிவகைகளின் சேர்க்கையினாலாகும்.  

சாதாரண சுங்க வரி (30%) + VAT (15%)+ PAL (7.5%) + NBT (2%) மற்றும் செஸ் வரி (30% மோ கிலோகிராமுக்கு 300 ரூபாய்) 2018 செப்டம்பரில் இந்த அதிக வரி அறவீட்டுக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த வரிகளில் செஸ் வரி (CESS) நீக்கப்பட்டது.  

இவ்வாறு (CESS) வரி நீக்கப்பட்டாலும் சுகாதார துவாய்கள் மற்றும் டெம்பூன்களுக்கு இலங்கை பெண்களில் அதிகமானோர் செலவு செய்யக்கூடிய அளவிலும் பார்க்க அதிக விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

சாதாரணமாக பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் நான்கு ஐந்து நாட்களாகும் அவ்வேளையில் ஒரு நாளைக்கு நான்கு பேட்கள்வரை தேவைப்படும்.  

ஏற்கனவே இருந்த வரி அறவிடல் காரணமாக ஒரு பெண் ஒரு மாதத்துக்கு 520 ரூபா அளவில் செலவு செய்ய நேரிடும்.  

இலங்கையில் மிகவும் வறியவர்களான நூற்றுக்கு 20 வீதமானோரின் மாத வருமானம் சாதாரணமாக 14843 ரூபாவாகும்.  

இவர்களுக்கு சுகாதார துவாய்களை வாங்க தமது வருமானத்தில் 3.5 வீதத்தை மாதந்தோறும் வெளியிட வேண்டும்.  

சர்வதேச ரீதியாக இவற்றுக்காக வரி விதிப்பை நீக்குமாறு மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. விசேடமாக அத்தியாவசிய சுகாதார உபகரணங்களுக்கு அதிகளவு விலையை நியமிப்பதை காரணமாக கொண்டு ஏற்படும் பாலியல் சமத்துவமின்மை (Period Povetry) மாதவிடாயை வறுமையென பெயரிட்டுள்ளது. மாதவிடாய்க்கான சுகாதார பாதுகாப்பு உற்பத்திகளுக்கான வரி விதிப்பை முதலில் நீக்கிய நாடு கென்யாவாகும். 2004ம் ஆண்டு அதனை நீக்கியது. அதனையடுத்து அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, அயர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் நீக்கின.  

அதிகரித்த விலையால் ஏற்படும் விளைவுகள்  

சுகாதார உற்பத்திகளுக்காக தற்போது இலங்கையிலுள்ள விலை, மாணவிகளின் கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

களுத்துறை மாவட்டத்தில் வயதுக்கு வந்த 720 மாணவிகள் 282 ஆசிரியைகள் மத்தியில் 2015ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி பெற்றோர்களில் நூற்றுக்கு 60 வீதமானோர் தங்களுடைய பெண்பிள்ளைகளை மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்கு அனுப்ப மறுக்கின்றார்கள்.  

மேலும் இலங்கையில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளிடம் எடுத்த ஆய்வில் மூன்றிலொருவருக்கு அந்நாட்களில் பாடசாலைக்கு செல்லமுடியாமற் போயுள்ளது. ஏன் போவதில்லை என்று கேட்டபோது அந்நாட்களில் ஏற்படும் உடல்வலி மற்றும் சங்கடங்களால் செல்வதில்லை எனக் கூறியுள்ளார்கள்.  

நூற்றுக்கு 22பேர் உடையில் படும் கறை வெளியே தெரியும் என்பதால் செய்வதில்லை எனக் கூறியுள்ளார்கள். சுகாதாரமான உபகரணங்களை பாவிக்க இயலாமையால் தற்காலிக மாதிரிகள் பாவனை, சுகாதாரமற்றவற்றை பாவித்தல் காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த மாதவிடாய் சுகாதார முகாமைத்துவம் (MHM) காரணமாக இனப்பெருக்க உறுப்புகளில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.  

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அவதானம் தொடர்பாக இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்ட போது மாதவிடாய் காலங்களில் துணியை பாவிப்பது நேரடி பாதிப்புக்கு வழிவகுக்கின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.  

இன்று இலங்கையில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இரண்டாமிடத்திலுள்ளது. பெண் தொழிலாளர் சக்தி பங்களிப்பு பாதிப்புக்கு இந்த சுகாதார பாதுகாப்பு உற்பத்திகளில் விலை அதிகரிப்பு காரணமாகின்றது. வங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும். பெண்களுக்கு சலுகை விலையில் சுகாதார துவாய்கள் வழங்கப்பட்டதானால் அவர்களின் வேலைக்கு வராத நாட்களின் எண்ணிக்கை குறைந்தது.  

உறுதியான முடிவை நோக்கி  

பெண்களுக்கு கட்டுப்படியாகாத விலைக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் காணப்படுவது மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு உறுதியான முடிவை பெற்று கொடுப்பதைப் பற்றி தீவிரமாக அரசு சிந்திப்பதால் இலங்கை பாலின சமத்துவத்தை ஊக்குவிக்குமானால் தற்போது அந்த உற்பத்திப் பொருட்கள் மீது விதித்துள்ள அதிக வரிச்சுமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கைப் பெண்கள் விலைக்கு வாங்க முடியாதளவு தற்போது அவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்புகளால் சுகாதார துவாய்கள் மற்றும் டெம்பூனின் விலை குறையலாம். அவற்றின் உற்பத்தி தொழில் போட்டி மற்றும் நவீனமயமாதலினால் விலை வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது.  

ஏற்றுமதி வரி விதிப்புக்கு ஆதரவானவர்கள் சம்பிரதாய பூர்வமாக உருவாக்கும் தர்க்கம் அதனால் தேசிய கைத்தொழில் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும். எவ்வாறாயினும் இலங்கையில் சுகாதாரத் துவாய்கள் மூலம் 25.16 மில்லியன் அளவு வருமானமே கிடைக்கின்றது. அது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 0.001% பங்காகும்.  

இந்த பிரச்சினை தொடர்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு விடயம் வரி விதிப்பை குறைப்பதால் தரத்தில் குறைந்த உற்பத்திகள் இலங்கை சந்தைக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதாகும். இங்கு SLSIII படி தரமான உயர் உற்பத்திகள் மாத்திரம் நாட்டிற்குள் வர அரசு கடுமையான தர நிர்ணயத்தை செயற்படுத்த வேண்டும்.  

அதைத் தவிர பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளின் கீழ் இலங்கை இணங்கியுள்ள Article 12(1) சட்டத்தின் மூலமும் தனி நபரின் மனநிலை மற்றும் சுகாதார வசதிகளை அனுபவிக்கும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அதிகரித்த வரி விதிப்பு மூலம் விலை அதிகரிப்பு காரணமாக பெண்களுக்கு உயர்தரத்திலான சுகாதார வசதிகளை அனுபவிக்கவுள்ள உரிமை மற்றும் சமத்துவத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் ICESCR (பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தால் ஏற்படுத்தபட்டுள்ள தாம்) தரம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மிகவும் குறைந்த விலைக்கு இந்த சுகாதார உற்பத்திகள் கிடைக்குமாயின் அவற்றை இலங்கைப் பெண்கள் பாவிக்கக்க கூடியதாக இருக்கும். அதி விசேட வர்த்தமானி மூலம் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும். PAL மற்றும் சாதாரண சுங்கவரியை மாத்திரம் நீக்குவதன் மூலம் இவற்றின் வரி நூற்றுக்கு 43.9 வீதத்திலிருந்து நூற்றுக்கு 18.7 என்ற அளவில் வீழ்ச்சியடையக் கூடும்.  

இதன் மூலம் பெண்பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும் தடை நீங்கும். பெண்களின் சுகாதாரம் மற்றும் தொழிலுக்கான பங்களிப்பு அதிகரிக்கும். தற்போது இலங்கையிலுள்ள பாலின ஏற்றத்தாழ்வுகள் நீங்கி பொருளாதார வளர்ச்சிக்கு இதன்மூலம் வசதிகள் கிடைக்கும்.   பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வாக்குறுதிகள் கேட்கின்றன. இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இதைவிட சிறந்த ஆரம்பம் எங்குள்ளது?

மொழிபெயர்ப்பு: வயலட்     

Comments