![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/12/colallu-arjun-shows-off-his-biceps-in-a-black-shirt_152094278360115922219_7941657_11012020_VKK_CMY.jpg?itok=mblIA1dH)
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கு வட்டாரங்கள் போல தமிழ் சினிமா வட்டாரத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவருக்கு டோலிவுட்டில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அடுத்ததாக அவரின் நடிப்பில் AVPL படம் இன்று வெளியாகவுள்ளது.
அண்மையில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் மேடை நிகழ்ச்சிகளை தாம் தவிர்ப்பதாக கூறியதோடு அந்நிகழ்ச்சிகள் தனக்கு கோடிகளில் சம்பளம் தர முன்வந்த போதும்நான் விருப்பம் காட்டவில்லை என கூறினார்.
Ala Vaikunthapurramuloo இசை நிகழ்ச்சியில் தான் நீண்ட நேரம் பேசுவேன் என நினைக்கவில்லை. இது தற்சமயத்தில் நிகழ்ந்தது என பேசினார்.