![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/11/29/a24.jpg?itok=P37z0iq1)
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் நடித்துக் கொண்டிருந்த போதே உச்சத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் தான் மோகன். இவர் தமிழில் ‘மூடுபனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் மைக் மோகன் என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் மோகன் ஒருகட்டத்தில் கமல், ரஜினியை தாண்டி பிரபலமான நடிகராக கருதப்பட்டார்.
இந்த நிலையில் மோகனின் சினிமா வாழ்க்கை காலியானதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது மோகனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் சுரேந்திரன் என்பவர் தானாம். மேலும் ஒரு பேட்டியில் சுரேந்திரன், ‘எனது வாய்சால் தான் மோகன் படங்கள் ஹிட் ஆகின்றன’ என்று கூறி இருந்தாராம். இதனால் மோகனுக்கு ஈகோ பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாம்.
இதனைத் தொடர்ந்து மோகன் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு தன்னுடைய ஒரிஜினல் குரலில் டப்பிங் கொடுத்தாராம். மேலும் மோகன் கன்னடத்தவர் என்பதால் அவருடைய தமிழ் வாய்ஸ் மக்களிடையே எடுபடவில்லை.
இதனால் மோகன் டப்பிங் வாய்ஸ் கொடுத்த மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தன. இந்த காரணத்தால் தான் மோகன் அவருடைய தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் என்று கூறப்படுகிறது.