![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/06/13/a18.jpg?itok=FY9B2Bf1)
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். தற்போது இவர் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தை முடித்து வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது. Twitter Space-இல் கலந்துரையாடிய தனுஷ், ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தனுஷ் 3 வருடம் கழித்து முழு நேர டைரக்டராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனுஷ் ராஜ்கிரன், ரேவதியை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியது குறிப்பிடதக்கது. அதற்குப் பின்னர் எடுத்த நான் ருத்திரன் என்ற படம் பாதியிலேயே நின்று விட்டது. இதன் மூலம் கிட்டத்தட்ட அடுத்த 3 ஆண்டுகள் தனுஷ் படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன் அவர் தான் என் முதல் சாய்ஸ் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிப்பு அசுரன் இயக்கத்திலும் கொடிகட்டி பறக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய ஆசையாக தெரிகிறது.
இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாரி செல்வராஜ், ராம், கார்த்திக் சுப்புராஜ், வெற்றி மாறன் போன்ற இளம் இயக்குனருடன் பணியாற்றி வருகிறேன் என்றும் இந்த திறமையான இயக்குனர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளார்.