![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/06/b10.jpg?itok=3xeRn57U)
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்தினருக்கு நிரந்தர விஸா வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விஸா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர்.
2018ம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்து வைத்திருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் குயின்ஸ்லாந்தின் பயோலாவிற்கு திரும்பினர்.
மீண்டும் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தமை குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இரண்டு சிறுமிகளும் பாடசாலை செல்கின்றனர்,நடேஸ் மீண்டும் வேலைக்கு செல்லவுள்ளார்.
நிரந்தர விசா குறித்த செய்தியால் குடும்பத்தினர், நண்பர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.