ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் 'சாஹித்திய ரத்னா' தெளிவத்தை ஜோசப்பின் இறுதிக்கிரியைகள் இன்று 23ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
அன்னாரின் புகழுடல் இன்று 2.00மணிவரை நீர்கொழும்பு வீதி, வத்தளையிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு பிற்பகல் 2.30மணியளவில் வத்தளை புனித அன்னம்மாள் தேவாலத்திற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு ஆராதனை நடத்தப்படும்.
அதன் பின்னர் மாலை 4.00மணிக்கு மட்டக்குளி மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
எமது நாட்டின் ஜனரஞ்சக எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான 'சாஹித்திய ரத்னா' விருது பெற்றவருமான தெளிவத்தை ஜோசப் கடந்த (ஒக் 21) தனது 88ஆவது வயதில் காலமானார்.