பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேக்கர எதிராகவே வாக்களித்திருந்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
இச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது ஆதரவாக 179வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக ஒருவாக்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு சட்ட மூலத்துக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேக்கர வாக்களித்திருந்தார்.
அதனையடுத்து, மூன்றாம் மதிப்பீடு மீதுவாக்கெடுப்பு இடம்பெற்றதுடன் சட்டமூலத்துக்கு ஆதரவாக 174வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இதன் போதும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேக்கர சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தாரென செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.