![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/02/12/03.jpg?itok=JiD8Glwt)
“பொறுமைக்கும் எல்லை உண்டு. ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும். பொறுமை எல்லை மீறும் போது ஒன்றுகூடி செய்ய வேண்டியதை செய்வோம்” என்ற சசிகலாவின் மிரட்டும் தொனியிலான பேச்சை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறு தமிழக பொலிஸாருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒன்றரை கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டு சென்றுள்ளார். கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தொண்டர்களை காக்கும் கடமையும் உள்ளது. ஒரு சிலர் போடும் ஆட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பேசும்போது, ஜெயலலிதா சொன்னது போல் நமது இயக்கம் ஒரு எஃகு கோட்டை. தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப் போவதில்லை.
நம்மை பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். ஒரு அளவுதான் பொறுமை காப்போம் அதற்கு மேல் செய்யவேண்டியதை செய்வோம் என்று ஆவேசம் மிரட்டும் விதமாக பேசியுள்ளார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் மிகப்பெரும் வன்முறையில் ஈடுபட சசிகலாவின் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அதிரடி சோதனை நடத்த ஆளுநர் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளராக கருதப்படும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் சென்னையில் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை கேட்டு, தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யார் தங்கி இருந்தாலும் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஓ. பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,
தர்ம யுத்தத்திற்கு வலு சேர்க்கும் வகையில், நம்முடன். ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக வந்து சேர்கிறார்கள். இனி ஒவ்வொரு அமைச்சர்களாக அனைவரும் நம்முடன் வந்து சேர்வார்கள்.
ஜெயலலிதாவின், ஆன்மா நம்மை இயக்கி கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி உருவாகியுள்ளது. கட்சி, ஆட்சியும் ஒரு குடும்பம் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்துவோம். இதை மக்கள் சக்தி நிருபித்து காட்டும். முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவும் அ.இ.அ.தி.மு.க.
தொண்டர்களை தம் பக்கம் இழுப்பதில் மும்முரம் காட்டிவரும் நிலையில், கட்சியை காப்பாற்றுவோம் என பன்னீர் செல்வமும் தொண்டர்களை காப்பேன் என சசிகலாவும் கூறி வருகின்றனர்.
தொண்டர்களை காக்கும் ஒரு முயற்சியாக சசிகலா, சட்ட மன்ற உறுப்பினர்ளை பாதுகாப்பாக உல்லாச விடுதிகளில் தங்கவைத்துள்ளார்.