![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/06/18/w0.jpg?itok=Dl9ttiMF)
எகிப்தில் கார் குண்டு வெடிப்பு மூலம் அரச சட்டத்தரணியை கொலை செய்த குற்றத்திற்காக 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தில் 2015ஆம் ஆண்டு மூத்த அரச சட்டத்தரணியாக பணியாற்றிய ஹிஷாம் பராகத் என்பவரின் கார் மீது வெடிகுண்டுகள் நிறைந்த காரை மோதி வெடிக்கவைத்து அவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுவைச் சார்ந்த பலரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 31 பேருக்கு மரண... (தொடர்)
நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 31 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
எகிப்து சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது.