சீனாவில் மண்சரிவு; புதையுண்டது கிராமம்; 46 வீடுகளுடன் 141 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

சீனாவில் மண்சரிவு; புதையுண்டது கிராமம்; 46 வீடுகளுடன் 141 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாரிய கற்பாறையொன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரை141 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்குள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷின்மோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 46 வீடுகளும் புதைந்துள்ளன. இதனால், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மீட்பு பணிகளில் பாதுகாப்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். திபெத்திய - அப் பகுதிக்கு

இடையே உள்ள மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Comments