![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/16/a20.jpg?itok=QpnzuZKL)
பங்களாதேஷ் அணிக்கெதிராக முதல் விக்கெட்டை வீழ்த்தியன் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் அதிவேகமாக 250விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 150ஓட்டங்களில் சுருண்டது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முதல் விக்கெட்டாக மொமினுல் ஹக்கை க்ளீன் போல்ட் மூலம் வீழ்த்தினார். இது அஸ்வினுக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டில் கைப்பற்றிய 250-வது விக்கெட்டாகும்.
இந்த விக்கெட்டுக்களை வீழ்த்த அவருக்கு 42போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிகவேகமாக 250விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார்.
அனில் கும்ப்ளே 43 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். ரங்கன ஹேரத் 44 போட்டிகளிலும், ஸ்டெயின் 49 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 51 போட்டிகளிலும் 250 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.