![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/23/q3.jpg?itok=eieJ3mH1)
நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகக் கடமையாற்றுவது சிரமமான காரியம் என அவுஸ்தரேலிய முன்னாள் நடுவரான சைமன் டபள் கூறியுள்ளார். தற்போது கிரிக்கெட் மைதானத்தில் அதி நவீன கமராக்களின் உதவியுடன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனிப்படுவதால் கள நடுவர் தீர்ப்பளிப்பதில் கடுமையான சிரமங்களைச் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது டீ. ஆர். எஸ். முறை மூலம் (நடுவரின் தீர்ப்பை கேள்விக்குட்படுத்தும் தொழில்நுட்பம்) அதிகமாக சரியான தீர்ப்புக்கள் கிடைத்தாலும் சில தீர்ப்புகளில் தவறுகள் ஏற்படுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். அதே போல் சர்ச்கைகுரிய பிடியெடுப்புக்களை தீர்மானிக்கவும், ஓடுபாதையில் ஆட்டமிழப்புகளை (ரன் அவுட்) சரியாகக் கணிப்பிட்டுச் சொல்லவும் ஸ்னிகோ மீட்டர், ஹொட்ஸ்பொட் போன்ற அதி நவீன கமராக்கள் அறிமுகப்பத்தப்பட்டுள்ளதால் சரியான தீர்ப்புக்கள் கிடைத்தாலும் சில வேளைகளில் நடுவர்களின் தீர்ப்புகளுக்கு எதிராக வீரர்கள் மோதலில் ஈடுபட வாய்ப்பேற்பட்டுள்ளது.
இதேபோல் எல். பி. டபிள்யூ. ஆட்டமிழப்புகளை சரியான முறையில் அறிந்துகொள்ள ‘Ball Tracking’ நவீன தொழில் நுட்பம் மூலம் நடுவரின் தீர்ப்புக்கு சவால்விடுவதற்கும் வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இம்முறையில் கூட திருப்திப்படாத பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நவீன தொழில்நுட்பம் கிரிக்கெட் விளையாட்டைப் போன்றே மற்றைய விளையாட்டுக்களான றக்பி, கால்பந்தாட்டம், டெனிஸ் போட்டிகளிலும் வியாப்பித்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
பலதடவைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலன் சிறந்த நடுவருக்கான விருதைப் பெற்ற சைமன் டொபுல் நவீன் தொழில்நுட்பத்தால் விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்ட பாதகங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடுவரின் தீர்ப்பை சுமார் முப்பது கமாரக்களை வைத்து பரிசீலித்தாலும் அதன் உச்ச பலனைப் பெற முடியாத பல சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
நவீன தொழிற்நுட்ப வளர்ச்சி முன்னேற்றம் உச்ச நிலை கண்டுள்ள போதிலும் சரியான தீர்ப்புகளை கேள்விக்குட்படுத்தும் சந்தர்பங்கள் இன்னும் குறையவில்லை. உதாரணத்துக்கு இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டியின் முடிவு இன்னும் பேசு பொருளாகவே உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டினார் முன்னாள் நடுவரான சைமன் டபள்.