மூன்று வடிவிலான கிரிக்கெட்: 100 போட்டிகளில் விளையாடி ரோஸ் டெய்லர் புதிய சாதனை | தினகரன் வாரமஞ்சரி

மூன்று வடிவிலான கிரிக்கெட்: 100 போட்டிகளில் விளையாடி ரோஸ் டெய்லர் புதிய சாதனை

சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் 100போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோஸ் டெய்லர் படைத்துள்ளார்.  

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். 100-வது டெஸ்டில் விளையாடிய 4-வது நியூசிலாந்து வீரர் ஆவார். விட்டோரி 112டெஸ்டிலும், ஸ்டீபன் பிளமிங் 111போட்டியிலும், பிரெண்டன் மெக்கலம் 101டெஸ்டிலும் விளையாடி உள்ளனர். 

டெய்லர் ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும், 20ஓவரிலும் 100ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 3வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20ஓவர்) 100ஆட்டத்தில் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் 3வடிவிலான போட்டிகளில் 100ஆட்டத்தை தொட்டது இல்லை.  35வயதான டெய்லர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 20ஓவரில் 100-வது ஆட்டத்தில் விளையாடினார். தற்போது 100-வது டெஸ்டிலும் இந்தியாவுக்கு எதிராக ஆடினார். 

டெய்லர் 100 டெஸ்டில் 7174 ஓட்டங்களும் (19 சதம், 33 அரை சதம்) 231 ஒருநாள் போட்டியில் 870 ஓட்டங்களும் (21 சதம், 51 அரை சதம்), நூறாவது 20 ஓவர் ஆட்டத்தில் 1909 ஓட்டங்களும் (7 அரை சதம்) எடுத்துள்ளார்.

Comments