21ஆவது விமானப்படை சைக்கிள் போட்டி; 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு | தினகரன் வாரமஞ்சரி

21ஆவது விமானப்படை சைக்கிள் போட்டி; 150 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு

இலங்கை விமானப் படையின் 69வது வருட நிறைவு நாளையொட்டி தொடர்ந்து 21வது தடவையாகவும் நடத்தப்படவுள்ள விமானப்படை சைக்கிள் சவாரி எதிர்வரும் 5, 6மற்றும் 7ம் திகதிகளில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை விமானப் படையும் இலங்கை சைக்கிளோட்ட  சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த சைக்கிள் சவாரிக்கான பிரதான அனுசரணையை சொப்ட்லொஜிக் நிறுவனம் வழங்குவதோடு வீட்டு மின்சார பொருட்கள் பங்குதாரராக சொப்ட்லொஜிக் மெக்ஸ், காப்புறுதி பங்கு தாரராக சொப்ட்லொஜிக் லைப் மற்றும் சுகாதார பாதுகாப்பு பங்குதாரராக ஆசிரி வைத்தியசாலை குழுமம் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.  

விமானப்படை சைக்கிள் போட்டிகளுக்கு உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை தேசிய தொலைகாட்சி வழங்கவுள்ளது. இப்போட்டியின் முக்கிய நோக்கம் சைக்கிளோட்டப் போட்டியை இலங்கையில் பிரபலப்படுத்தி சைக்கிள் போட்டியாளர்களிடையே போட்டி தன்மையை ஏற்படுத்துவதாகும்.

இப்போட்டி தேசிய சைக்கிள் சம்மேளனத்தின் சட்ட திட்டங்களின்படி, சர்வதேச தரத்திற்கு மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படவுள்ளது. 

விமானப் படையின் 69ஆவது ஆண்டு நிறைவுவிழாவுக்கு இணைந்ததாக நடத்தப்படுகின்ற சைக்கிள்  போட்டியில் இலங்கையின் முக்கிய பிரபலமான சைக்கிளோட்ப் போட்டியாளர்கள் 150பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளார்கள். அதேவேளை சர்வதேச சைக்கிளோட்ட வீரர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

ஆண்கள் சைக்கிள் போட்டி 

 05ம் திகதி கொழும்பிலிருந்து கண்டி வரை (109.53கி.மீ) சுதந்திர ஓட்ட வலயம் (15கி.மீ)  

 06ம் திகதி கண்டியிலிருந்து திருகோணமலை வரை 199.05கி.மீ. சுதந்திர ஓட்ட வலயம் (16கி.மீ) 

 07ம் திகதி திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் வரை (136.04கி.மீ) சுதந்திர ஓட்ட தூரம் (20கி.மீ) 

போட்டியின் மொத்த தூரம் 444.62கி.மீ.

அதேபோல்  7ம் திகதி பெண்களுக்கான போட்டி புத்தளத்திலிருந்து அநுராதபுரம் வரை நடத்தப்படவுள்ளதோடு மொத்த தூரம் 110.00கி.மீ. 

போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை முதலாம் இடம் 300000.00ரூபா, இரண்டாமிடம் 200000.00ரூபா, மூன்றாமிடம் 100000.00ரூபா. நான்காமிடம் 60000.00ரூபா, ஐந்தாமிடம் 40000.00ரூபா, ஆறாமிடம் 30000.00ரூபா, ஏழாமிடம் 20000.00ரூபா எட்டாமிடம் 15000.00ரூபா ஒன்பதாமிடம் 15000.00ரூபா பத்தாமிடம் 15000.00ரூபா, பதினொராமிடத்திலிருந்து பதினைந்தாம் இடம்வரை ஒரு வீரருக்கு 7500.00ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. பதினாறாமிடத்திலிருந்து 25ம் இடம்வரை வீரருக்கு 5000.00ரூபா வரை வழங்கப்படவுள்ளது. 

மொத்த ஸ்பிரின்ட் பரிசு 40000.00ரூபாவாகும். 

1வது கட்ட ஸ்பிரின்ட் விருது 7500.00ரூபா 

2வது கட்ட ஸ்பிரின்ட் விருது 7500.00ரூபா 

3வது கட்ட ஸ்பிரின்ட் விருது 7500.00ரூபா  ஒவ்வொரு கட்டத்துக்காக பரிசுகள்  

முதலாமிடம் 15000.00ரூபா, இரண்டாமிடம் 10000.00ரூபா, மூன்றாவது இடம் 5000.00ரூபா 

மொத்த தலை மீதான போட்டி பரிசு 25000.00ரூபா 

அனைத்து அணிகளுக்குமான பரிசுகள் 

வெற்றிபெற்ற குழுவுக்கு 160000.00ரூபா, இரண்டாமிடம் 100000.00ரூபா, சிறந்த வீரர் (23வயதுக்கு கீழ்) 40000.00ரூபா. 

இலங்கை விமானப் படை பெண் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் முகமாக ஒன்பதாவது தடவையாகவும் சைக்கிளோட்டப் போட்டிகளை நடத்தவுள்ளது.

Comments