![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/17/bb.jpg?itok=jbT6u0-w)
அமானா வங்கி டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட Self Banking Zone ஐ தெஹிவளை கிளையில் அறிமுகம் செய்துள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு செளகரியமான சுய-வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கிச்சேவைகள், e- அறிக்கைகள் மற்றும் SMS அலேர்ட்ஸ் போன்றவற்றுக்கு பதிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், டெபிட் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் முடியும். மேலும், டெபிட் அட்டைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளான புதிய கணக்குகளை அட்டையில் இணைத்தல், PIN குறியீட்டை மாற்றிக் கொள்ளல் மற்றும் எல்லைப் பெறுமதிகளை மேம்படுத்திக் கொள்ளல் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.
இந்த அறிமுகம் தொடர்பாக வங்கியின் பிரதம தகவல் அதிகாரி ராஜித திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் Digital Self Banking Zone இன் அறிமுகம், மனிதாபிமானத்தை முதன்மையாக கொண்ட வங்கி கட்டமைப்பு என்பதற்கமைய வாடிக்கையாளரின் வங்கியியல் அனுபவத்தை அதிகளவு செளகரியம் மற்றும் அணுகும் திறன் ஆகியவற்றுடன் மேம்படுத்துவதற்கான எமது வழிமுறையாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தச் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
வங்கியின் டிஜிட்டல் வங்கிச்சேவைப் பிரிவின் தலைமை அதிகாரி சஞ்ஜீவ ஃபொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில், “ இதன் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு வங்கியினுள் மேற்கொள்ளும் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களை செளகரியமாக, வங்கி அலுவலக நேரங்களில் வங்கிக்கு விஜயம் செய்யாமல், தமக்கு இயலுமான வேளைகளில் சுயமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
அமானா வங்கியே உலகெங்கும் பிரபல்யம் அடைந்துவரும் வட்டியற்ற, மக்களுக்கு நட்புறவான வங்கிச் சேவை முறைக்கு முற்றிலும் அமைவாகச் செயற்படும் இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகும். வளர்ச்சிக்கு வழிகாட்டி மக்களின் வாழ்வுக்கு வளமூட்டும் குறிக்கோளைக் கொண்டுள்ள அமானா வங்கி, நாடெங்குமுள்ள கிளைகள் மற்றும் சுயசேவை வங்கி நிலையங்களை உள்ளடக்கிய விரிவடைந்துவரும் வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கி வருகின்றது.