![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/24/a27.jpg?itok=UrEahHFS)
ASUS நிறுவனம் இளையோருக்காகவே வடிமைத்துள்ள தனது புத்தம் புதிய VivoBook S மடிக்கணனி வரிசையை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. ASUS VivoBook S மடிக்கணனிகள் இளையோரின் தேவை மற்றும் அவர்களின் ஆற்றலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.
மிகவசதியாக கொண்டுசெல்லக்கூடியதோர் வடிவமைப்புடைய VivoBook S மடிக்கணனிகள் செயற்திறன் நவீனத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கு சரியாக பொருந்தும் வகையில் காணப்படுவதோடு பயன்படுத்துவோர் பெருமிதம் கொள்ளக்கூடியதோடு செயற்பாட்டில் மிகச் சிறந்த தரத்தில் காணப்படுகின்றது.
VivoBook S மடிக்கணனிகளில் காணப்படும் விசேட Diamond - cut edges Metallic textured மேலும் இதன் விசேடவண்ணங்களினால் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. எந்தவொரு மேசையின் மீதும் தனித்துவமாக தெரிந்திடுமோர் வண்ணமான Resolute Red இயற்கை அரவணைப்புடைய Gaia Green நவீனத்துவமுடைய Dreamy W}itw மற்றும் Indie Black போன்ற வர்ணங்களில் காணப்படுவதோடு திரையினை திறந்ததிலிருந்தே பயன்படுத்துபவரை கவர்ந்திழுக்கும் Color – blocked edges cila Enter Key இக்கணனி அனுபவத்தினை ஒப்பற்றதாக்கிடும்.
இம் மடிக்கணனிகளுடன் கிடைத்திடும் ஸ்டிக்கர்களை பயன்படுத்திபயன்படுத்துபவர் விரும்பியவாறு அழகுப்படுத்தி மேலும் மெருகூட்டக்கூடியமை மேலுமோர் விசேட அம்சமாகும்.
மென்மை மற்றும் இலகுவானதோர் வடிவமைப்பினை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு போன்றே எடுத்துச் சென்றிடவும் மிக இலகுவாக அமைந்திடும்.
இதில் காணப்படும் Thin - bezel nanoEdge திரை நீளமானதோடு மிகச் சிறந்த பார்வை அனுபவத்தினையும் தந்திடும். சிறந்ததோர் திரை வடிவமைப்பினை கொண்டுள்ளதால் ஒரேநேரத்தில் பலவேலைகளை செய்வோருக்கு வசதியையும் தந்திடும்.
Numeric முதலியன (உள்நுழைவதற்கான எண் விசைத்தளம்) பயன்படுத்திட விரும்புவோருக்காக VivoBook S14ல், புதிய ASUS NumberPad 2.0னை சேர்த்துள்ளது. இப்புதிய LED - illuminated numeric keypad னால் மிகவேகமாக தகவல்களை சேர்ப்பதற்கான வாய்ப்பினையும் வழங்கியுள்ளது.