லங்கன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

லங்கன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர்கள்!

இலங்கையில் முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள லங்கன் பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 தொடரில் இருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். மேலும், இத்தொடரின் முதல் 10 நாட்களுக்கான போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தொடரில் இடம்பெற்றுள்ள காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அகமது இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ரி-20 நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. கிறிஸ் கெய்ல், டஸ்கர்கருடனான தனது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகின்றது.

கொழும்பு கிங்ஸ் அணி பயிற்றுவிப்பாளர் டேவ் வாட்மோர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அதற்கு பதிலாக முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கபீர் இப்போது கொவிட்-19க்கு சாதகமாக சோதனை செய்ததால், அவர் லீக்கில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் டஸ்கர்கருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2017ஆம் ஆண்டு முதல் எந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் லியாம் பிளங்கெட் ஆகியோரும் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments