![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/05/02/a25.jpg?itok=4UY9S5m_)
தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பிரவீன் ஜயவிக்கிரமவின் சுழல் பந்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்று 242 ஓட்டங்களால் இலங்கை அணியை விட பின்நோக்கி இருந்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லகிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கினர்.திரிமான்ன 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் கருணாரத்னவுடன் இணைந்தார் ஓஷத பெர்ணான்டோ அவரும் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்,பின்னர் கருணாரத்னவுடன் இணைந்தார் அஞ்சலோ மெத்திவ்ஸ் இருவரும் ஆட்டமிழக்கால் முறையே 13,01 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பில் தயிஜூல் இஸ்லாம் ,மிராஸ் தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.
இலங்கை அணி 259 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சயிப் ஹசன் இருவரும் களமிங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இருவரும் முதல் விக்கெட்டுக்காக 98 ஓட்டங்கள் குவித்த போது சயிப் ஹசன் 25 ஓட்டங்களுக்கு பிரவீன் ஜயவிக்ரமிவின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் அவ்வணியின் நஜ்முல் ஹோசைன் சான்டோ தமீம் இக்பாலுடன் ஜோடி சேர அவர் வந்த வேகத்தில் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார்.
பின்னர் இக்பாலுடன் இணைந்தார் அணியின் தலைவர் மொய்முல் ஹக் அவரும் நல்லதொரு இணைப்பாட்டத்தை வழங்குவார்கள் என்ற நிலையில் தமீம் இக்பால் 92 ஓட்டங்கள் பெற்ற போது பிரவீன் ஜயவிக்ரவின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.பின்னர் அணியின் தலைவர் ஹக்குடன் இணைந்தார் முஸ்பிகுர் ரஹீம் இருவரும் நன்றாகவும் நிதானமாகவும் ஆடிய வேளை முஸ்பிகுர் ரஹீம் 40 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.இருவரும் 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.பின்னர் அணியின் தலைவருடன் இணைந்தார்.லிட்டன் தாஸ் இருவரும் ஆடுவார்கள் என்ற நிலையில் அணியின் தலைவர் 49 ஓட்டங்களுக்கு தனது அரைச் சதகனவை பறி கொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.
பின்னர் தாஸுடன் இணைந்தார் மிராஷ்.தாஸ் 16 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க பின்னர் மிராஸ் 16 ஓட்டத்துடன் பின்னர் வந்த தஸ்கின் அஹமது ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க பின்னர் வந்த சொரிபுல் இஸ்லாம் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க பின்னர் தைஜூல் இஸ்லாம் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுக்களையும் ரமேஷ் மென்டிஸ் இரு விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் இரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
பிரவீன் ஜயவிக்ரம தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கி 92 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.1999ம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய உப்புல் சந்தன 6 விக்கெட்டை 179 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.பங்களாதேஷ் அணியின் கடைசி 7 விக்கெட்டுக்களும் 37 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிங்கி அவ்வணியின் தொடக்க வீரர்களான திமுத் கருணாரட்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சதம் கடந்தனர்.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தனது 12 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லஹிரு திரிமான்ன தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தைப் பெற்று 140 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஒஷாத பெர்ணான்டோ 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இடை வரிசைத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 30 ஓட்டங்களைப் பெற்றார்.
இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 469 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆடுகளத்தில் நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமான வேளை மேலதிகமாக 24 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 7 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. ரமேஸ் மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஆடுகளத்தில் டிக்வெல்ல 77 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழக்காது இருந்தார்.
இந்நிலையில், தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்துவதாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன அறிவித்தார்.
இன்று போட்டியின் நான்காவது நாளுகும்.