அடுத்த வாரம் முதல் ஜப்பானில் நடக்கும் டோக்கியோ பராலிம்பிக்கில் மகேஷ் ஜெயக்கொடி போட்டியிடுகிறார். முதல் முறையாக படகோட்ட போட்டிகளில் இலங்கை போட்டியிடுகிறது..
இராணுவ சிறப்பு படை விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஜயக்கொடி, டோக்கியோவில் 2021 ஆசிய கான்டினென்டல் படகோட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார், இது டோக்கியோ பராலிம்பிக்கில் இடம்பெற வழி வகுத்தது.
முன்னதாக, ஜயக்கொடி 2019 ஆம் ஆண்டில் ஆசிய பரா சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார் மற்றும் அனைத்து முக்கிய உள்ளூர் போட்டிகளிலும் இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
இதற்கிடையில், டோக்கியோ பரா ஒலிம்பிக்கிற்கான படகோட்டுதல் பயிற்சியாளராக ஜயக்கொடியுடன் லசந்த வெலிக்கல உள்ளார். "நாங்கள் 2012 இல் முதல் பதக்கத்தையும் 2016 இல் இரண்டாவது பதக்கத்தையும் வென்றோம். டோக்கியோவில் பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவோம் என்று நம்புகிறோம்" என்று இலங்கை தேசிய பரா ஒலிம்பிக் சங்க தலைவர் லெப்டினன்ட் கேர்னல் தீபால் ஹேரத் தெரிவித்தார். "எங்கள் முக்கிய பதக்க வாய்ப்புகள் தடகளத்தில் உள்ளன.
குறைந்தபட்சம் ஐந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் முயற்சிகள் மற்றும் தியாகங்களால் இந்த நிலையை அடைய இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்திற்காக போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு, ”என்று அவர் முடித்தார்.