இந்த ஆண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் ஆண்டின் விளையாட்டு வீராங்கனையைத் தேர்ந்தெடுப்பதற்கான பாடசாலை கிரிக்கெட் விருது விழாவை சண்டே ஒப்சேர்வர்–எஸ்எல்ரி மொபிடெல் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த வீரர்களின் தேர்வு வாசகர்களின் விருப்பப்படி செய்யப்படும். மற்றும் தேவையான கூப்பன்கள் இன்று (03) முதல் லேக் ஹவுஸ் வெளியிடும் பத்திரிகைகளில் பிரசுரமாககின்றது.
எஸ்எல்ரி மொபிடெல், இலங்கையின் வேகமான மற்றும் அதிக கவரேஜ் கொண்ட தொலைபேசி நிறுவனமாகும். தொடர்ச்சியாக 14 ஆவது வருடமாக விருது நிகழ்வுக்கு இந்நிறுவனம் தொடர்ந்து அனுசரணை வழங்கி வருகிறது.
பாடசாலை மட்டத்தில் திறமையான கிரிக்கெட் வீரர்களை தேசிய அணிக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் 1979 இல் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா, நான்கு தசாப்தங்களாக 42 பாடசாலை கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளது.இம்முறை இடம்பெறும் விழா 43 வது விருது விழா ஆகும்.
மேலும், பாடசாலை விளையாட்டு வீராங்கனைகளிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் உருவாக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கான விருது வழங்கும் விழா தொடங்கப்பட்டது.
கூப்பன்களை அனுப்பும் வாசகர்களும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது.
மொபிடெல், இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் அலைவரிசையாகும், பிரீமியம் கூப்பன் குலுக்கலில் வாராந்த பரிசுகளை வழங்குகிறது. அதன்படி, மொபிடெல் முதல் இடத்திற்கு 4G ரவுட்டரும், இரண்டாவது முதல் நான்காவது இடங்களுக்கு ரூ. 2500, 1500 மற்றும் 1000 பரிசும் வழங்கப்படும்.
காலி மஹிந்த கல்லூரியின் நவோத் பரணவிதான கடந்த 42 ஆவது விருது நிகழ்வில் ஆண்டின் பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார், ராஜ்கம தேவபதிராஜா கல்லூரியின் கவிஷா தில்ஹாரி ஆண்டின் பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை வென்றார்.
ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும் நவோத் வென்றார்.
43ஆவது விருது அனுசரணை நிகழ்வில் சண்டே ஒப்சேர்வரின் பிரதம ஆசிரியர் தினேஷ் வீரவன்ச, சானக லியனகே (முகாமையாளர் -பிரசாரம் மற்றும் விளம்பரம்) மற்றும் மொபிடெலின் நிறுவனம் சார்பாக ஜூட் சில்வா (சிரேஷ்ட முகாமையாளர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.