![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/10/25/a3_0.jpg?itok=ww1-zOyP)
யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 2021 ஐசிசி ரி 20 உலகக் கிண்ணத்தில் முறையே மூத்த மற்றும் இளைய வீரர்களாக சாதனை படைக்கவுள்ளனர்.
உலகக் கிண்ணத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட மூத்த வீரர்களையும், 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இளைய வீரர்களையும் உங்களுக்கு தருகின்றோம்.
தற்போது 20க்கு 20 உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கிறிஸ் கெய்ல், 1000+ ஓட்டங்களைக் கொண்ட மஹேல ஜயவர்தன கழகத்தில் சேர 80 ஓட்டங்கள் குறைவாக உள்ளது.
20க்கு 20 போட்டிகளில் 14,000+ ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் மற்றும் 2006 முதல் விளையாடி வரும் வீரராகவும் இவர் உள்ளார்.
முகமது ஹபீஸ் தனது 42 வது வயதை எட்டியிருக்கிறார், இரண்டாவது வயதான வீரர் இவராவார்.
அத்தோடு நெதர்லாந்தின் 41 வயதான ரியான் டென் டோஷேட் உலகக் கிண்ணத்துக்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓமானின் மொஹமட் நதீம் மற்றும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் இன்னும் 39 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய வீரர்களைப் பொறுத்தவரை, ரஹ்மானுல்லா குர்பாஸ் இன்னும் 20 வயதை எட்டவில்லை மற்றும் சக அணி வீரர் முர்ஜிப்-உர் ரகுமான் டி 20 தரவரிசையில் 6 வது இடத்தில் உள்ளார். இலங்கையின் புதியவரான மகீஷ் தீக்ஷனா 2000 ஆம் ஆண்டு பிறந்த இலங்கை வீரர் ஆவார்.
21ஆம் நூற்றாண்டில் பிறந்த
வீரர்களின் பட்டியல்
1.) ரஹ்மானுல்லா குர்பாஸ் (AFG)
2.) முஜீப்-உர் ரகுமான் (AFG)
3.) ஷமிம் ஹொசைன் (BAN)
4.) ஷோரிஃபுல் இஸ்லாம் (BAN)
5.) நீல் ராக் (IRE)
6.) ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் (NAM)
7.) பென் ஷிகோங்கோ (NAM)
8.) பிலிப் போய்சேவைன் (NED)
9.) ஷாஹீன் அஃப்ரிடி (PAK)
10.) ஹைதர் அலி (PAK)
11.) மொஹமட் வாசிம் ஜூனியர் (PAK)
12.) மகேஷ் தீக்ஷனா (SRI)
2007 ரி20 உலகக் கிண்ணத்தின் தொடக்கத்திலிருந்து விளையாடிய இளையவர்கள் மற்றும் வயதானவர்கள் என 2 தலைமுறை வீரர்கள் உள்ளனர் என்பது மிகவும் தெளிவாக உள்ளது.