விமானப்படைத் தளபதி கிண்ணத்துக்கான வருடாந்த கொல்ப் போட்டி தொடர் 2022 | தினகரன் வாரமஞ்சரி

விமானப்படைத் தளபதி கிண்ணத்துக்கான வருடாந்த கொல்ப் போட்டி தொடர் 2022

இலங்கை விமானப்படை மற்றும் ஈகல்ஸ் கொல்ப் லிங்க் ஏற்பாடு செய்த 2022விமானப்படைத் தளபதி கிண்ணத்துக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் வருடாந்த கொல்ப் போட்டித்தொடர் இலங்கை விமானப்படை சீனன் குடா ஈகிள்ஸ் கொல்ப் லிங்ஸ் விளையாட்டு மைதானத்தில் 2022இம் மாதம் 22ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டலின் கீழ் இலங்கை விமானப்படை 9ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டி தொடரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர வீராங்கனைகள் 100பேருக்கும் அதிகளவில் கலந்து கொண்டார்கள்.

விமானப்படைத் தளபதி கிண்ணத்துக்கு மேலதிகமாக திறமையான முப்படைகளில் பணியாற்றும் விளையாட்டு வீரர்களுக்குரிய ஈகள்ஸ் சவால் கிண்ணத்துக்கான போட்டியும் நடைபெற்றதோடு இந்தப் போட்டித் தொடரின் வெற்றியாளர்களுக்கு விருதும் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்ட ன. இந்நிகழ்வு 2022ஜனவரி மாதம் 22ஆம் திகதி மாலை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையில் நடைபெற்றது.

இங்கு விமானப்படை தளபதி சவால் கிண்ண போட்டிகள் மற்றும் திறமையான முப்படை விளையாட்டு வீரர்களுக்கான ஈகள்ஸ் சவால் கிண்ண போட்டித் தொடரின் பரிசுகளைப் பெற்ற வெற்றியாளர்கள்.

ஆண்களுக்கான விமானபடைத் தளபதி கொல்ப் கிண்ணம் -கடற்படை கேப்டன் ஜயலத் பெரேரா (ஓய்வு பெற்ற)

பெண்களுக்கான விமானப்படைத் தளபதி கொல்ப் கிண்ணம்- நிலோ ஜயதிலக்க

முப்படைகளுக்கான திறமையான விளையாட்டு வீரர் கடற்படை- கமாண்டர் கே.எம்.எம்.பி கருணாதிலக்க

இவ்வருட விமானத் தளபதி கொல்ப் கிண்ணம் போட்டி தொடருக்கு டயலொக் என்டர்பிரைஸ் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியதோடு இவ்வருடம் Trinco Blue by cinnamon மற்றும் JKAB beach resort நிறுவனமும் இலங்கை விமானப் படையுடன் இணைந்து போட்டி தொடரருக்கு பராமரிப்பு பங்களிப்பினையும் பெற்றுக் கொடுத்தார்கள்.

திருகோணமலை குறூப் நிருபர்

 

Comments