அம்பேவெல புதிய வர்த்தக நாம தூதுவராக Mrs. World 2020 கரோலின் ஜுரி | தினகரன் வாரமஞ்சரி

அம்பேவெல புதிய வர்த்தக நாம தூதுவராக Mrs. World 2020 கரோலின் ஜுரி

2020ஆம் ஆண்டின் Mrs. World உலக அழகிப் பட்டத்தை வென்றை கரோலின் ஜுரியை தமது உத்தியோகபூர்வ வர்த்தக நாமத் தூதுவராக நியமித்துள்ளதாக அம்பேவெல அறிவித்துள்ளது. இலங்கையின் நம்பிக்கையை வென்ற உயர்தரம் மற்றும் போஷாக்கு நிறைந்த பாலுற்பத்திகளை விநியோகிக்கும் அம்பேவெல, கரோலின் ஜுரியுடன் ஏற்படுத்தியுள்ள இந்தப் பங்காண்மை இயற்கையாகவே மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.  

அம்பேவெல தனது பரந்தளவு உயர்தரம் வாய்ந்த பாலுற்பத்திகளில் பசுப் பால், கொழுப்பற்ற பால், சுவையூட்டப்பட்ட பால், யோகட், பட்டர் மற்றும் சீஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கையர்களுக்கு போஷாக்கும் சுவையும் நிறைந்த பாலுற்பத்திகளை 16வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகின்றது. உள்நாட்டு வர்த்தக நாமம் எனும் வகையில், உயர் தரத்துக்கு அதிகளவு அர்ப்பணிப்பை வழங்கி, அம்பேவெல சந்தையில் உயர்ந்த  ஸ்தானத்திலும், சிறப்புக்கான அடையாளமாகவும் திகழ்கின்றது.  

உலகளாவிய ரீதியில் இலங்கையின் கீர்த்தி நாமத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றதில் கரோலின் ஜுரிக்கு முக்கிய பங்கு உண்டு. வலுவூட்டப்பட்ட நவீன காலத்துப் பெண்ணுக்கான அடையாளமாக இவர் திகழ்வதுடன், ஒரு தாய், மனைவி மற்றும் தொழில் முயற்சியாளராகவும் திகழ்கின்றார். இவரைப் போன்ற பெண்களுக்கு வலுவூட்ட அம்பேவெல பால் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உதவியளிப்பதுடன், குடும்பத்தாருக்கு சிறந்த போஷாக்கை பெற்றுக் கொடுக்க பங்களிப்பு வழங்குகின்றது. அம்பேவெல முன்னெடுக்கும் புதிய பிரச்சாரத் திட்டங்களில் கரோலின் தூதுவராக பங்கேற்று வர்த்தக நாமத்துக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளார்.  

அம்பேவெல வர்த்தக நாமத் தூதுவராக நியமனம் பெற்றமை தொடர்பில் கரோலின் ஜுரி கருத்துத் தெரிவிக்கையில், “அதிகளவு நம்பிக்கையை வென்ற உள்நாட்டு வர்த்தக நாமம் எனும் வகையில் அம்பேவெல எமது குடும்பத்தின் அத்தியாவசிய அங்கமாக ஆரம்பம் முதலே அமைந்துள்ளது.

சிறந்த போஷாக்கு மற்றும் நலச்செழுமை காரணமாக, எனது தாயார் அம்பேவெல தயாரிப்புகளின் மீது அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். எனது பிள்ளைகளுக்கும் இதே பாரம்பரியத்தை நான் தொடர்கின்றேன். சிறப்புக்கான அம்பேவெலவின் உறுதி செய்யப்பட்ட அர்ப்பணிப்பின் காரணமாக, எனக்கு இந்த நாமத்துடன் கைகோர்க்கக் கிடைத்தமை சிறந்த கெளரவமாகக் கருதுகின்றேன்.” என்றார்.

Comments