![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/10/a23.jpg?itok=UzSdrJ03)
அதி முக்கிய அரசியல் பிரமுகர்கள் VIP தொடரணியில் கட்டுநாயக்க அதிவேக வீதியூடாக வானூர்தி நிலையத்தை நோக்கி நேற்று யாரோ சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கிய பிரமுகர்கள் VIP க்கள் பயணிக்கும் 20 கார்களில் நாட்டை விட்டு வெளியேறினார்களா என்ற சந்தேகம் எழுந்ததாக செய்திகள் தெரிவித்தன. இதேவேளை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு பெருமளவிலான இராணுவத்தினர் திடீரென நேற்று வரவழைக்கப்பட்டதாக நேற்று செய்திகள் தெரிவித்தன.