சர்வகட்சி அரசை அமைக்க பதவி விலகி வழிவிட தயார் | தினகரன் வாரமஞ்சரி

சர்வகட்சி அரசை அமைக்க பதவி விலகி வழிவிட தயார்

பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வ கட்சி அரசாங்கமொன்றுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்குத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் பரிந்துரையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பெரும்பாலான கட்சித் தலைவர்கள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்போது மேலும் தெரிவித்த பிரதமர்,

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரத்தில் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரத்தில் நாட்டுக்கு வருகை தர உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான ஸ்தீரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைக் கருத்திற் கொண்டே தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments