![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/10/a8.jpg?itok=LrUD5G7a)
ரயில் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் அதன் அரைவாசியை விட குறைந்த அளவிலேயே ரயில் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த வகையில் ஆகக் குறைந்த கட்டணம் 20ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடப்பட்டு வருவதாகவும் அரசாங்க அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணங்கள் பல தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் ரயில் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி உட்பட ஏனைய விடயங்களைக் கவனத்திற் கொண்டு இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் ஆகக் குறைந்த பத்து ரூபா ரயில் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லோரன்ஸ் செல்வநாயகம்