![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/23/a12.jpg?itok=ISXJkYXv)
அயல்நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.கடந்த 10ஆண்டுகளில் இந்தியா இலங்கைக்கு 1800மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி உதவிகளுக்கு அப்பால் இந்தியா இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய லோக்சபாவில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(ஸ)