![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/23/a2.jpg?itok=wgXOYJu5)
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்படி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்துக்கிணங்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி அமைதியை முன்னெடுப்பதற்கும் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும் அனைத்து இராணுவத்தினரையும் கடமைக்கு அழைக்கும் வகையில் அந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்று முன்தினம் அதிகாலை ஜனாதிபதி செயலக சுற்றுப் பகுதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முப்படையினரும் நேற்று முன்தினம் அதிகாலை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைக்கிணங்க அது இடம்பெற்றுள்ளது.
அந்த நடவடிக்கைகளில் முப்படையினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட செயலணியும் இணைந்து செயற்பட்டுள்ளனர். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜனாதிபதி செயலக பிரதேசம் படையினரின்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்