நாட்டில் மீண்டும் கொவிட் மரணங்கள் அதிகரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் மீண்டும் கொவிட் மரணங்கள் அதிகரிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் நேற்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில்:

நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 50ஐக் கடந்துள்ளதாகவும் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 57பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதுடன் நாட்டில் இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்று க்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,64,647ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.

அதே வேளை கொரோனா தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு அந்த பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதற்கிணங்க 20வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கொழும்பு மாநகர சபையின் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

முற்பகல் 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை முதலாவது இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளையும் இந்த மையங்களின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments