போக்குவரத்து கட்டண அதிகரிப்பை தவிர்க்க பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய பஸ் சேவை | தினகரன் வாரமஞ்சரி

போக்குவரத்து கட்டண அதிகரிப்பை தவிர்க்க பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் புதிய பஸ் சேவை

பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை நாளை முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும்நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற் கொண்டு இந்த புதிய பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments