![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/14/a13.jpg?itok=H_SIgoNL)
வெள்ளவத்தையில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலொன்று நேற்று முன்தினம் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ் சங்கத்துக்கருகில் பெண்ணொருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
எனினும் அங்கிருந்தவர்களால் கொள்ளைக்கும்பல் வளைத்து பிடிக்கப்பட்ட போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இலக்கத்தகடில்லாத முச்சக்கர வண்டியில் வந்த கும்பலொன்றினால் இக்கொள்ளைச் சம்பவ முயற்சி இடம்பெற்றுள்ளது.
வெளியில் செல்லும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்கும்படி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.