![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/14/a3.jpg?itok=1P2D7oeQ)
வருட இறுதிக்குள் 200கோடி டொலரே இலக்கு-முதலீட்டுச் சபை
பொலன்னறுவை மற்றும் வெலிகந்த ரயில் நிலையங்களுக்கருகில் ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான காணி களுக்குள் நிறுவப்பட்டிருக்கும் எண்ணெய்த் தாங்கிகளை துரிதமாக புனரமைத்து எரிபொருள் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய்த் தாங்கிகள் கவனிப்பாரற்று காடு மண்டிக்கிடப்பதாக தெரிவித்த அமைச்சர் இவை பெற்றோலிக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமானவையென்றும் தெரிவித்தார்.
பொலன்னறுவை மற்றும் வெலிகந்த ரயில் நிலையங்களின் கண்காணிப்பு விஜயத்தையடுத்தே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,
பொலன்னறுவை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள எண்ணெய்த் தாங்கிகள் தலா சுமார் 1,00,000லீற்றர் எரிபொருளை சேமித்து வைக்கக்கூடிய 03தாங்கிகள் இருப்பதாகவும் வெலிகந்த ரயில் நிலையத்துக்கு அண்மித்த பகுதியிலுள்ள எண்ணெய்த் தாங்கிகள் 54,000லீற்றர் எரிபொருளை சேமித்து வைக்கக்கூடிய 05தாங்கிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரயில்கள் மூலம் எரிபொருள் போக்குவரத்தை மேற்கொள்ளும்போது குறைந்தளவு செலவே ஏற்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் விரைவில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவுடன் பேச்சு நடத்தி கவனிப்பாரற்றுக் கிடக்கும் இந்த எண்ணெய்த்தாங்கிகளை புனரமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென்றும தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ் குணசிங்க உட்பட ரயில்வே திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.