உழவு இயந்திரம் கவிழ்ந்து 03 பெண்கள் பரிதாப பலி | தினகரன் வாரமஞ்சரி

உழவு இயந்திரம் கவிழ்ந்து 03 பெண்கள் பரிதாப பலி

திருகோணமலை பச்சனூர் பகுதியில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் கொழுக்கி கழன்று விழுந்ததாகவும் இதன் போது மூவர் உயிரெழுந்துள்ள நிலையில் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர் 

Comments