ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா செப்டெம்பர் 06 இல் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா செப்டெம்பர் 06 இல்

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (06) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் “ஒன்றிணைவோம்” என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.  28வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1993ஆம் ஆண்டு டி.பி.விஜேதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த போது கட்சியின் ஆண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன. 

ஆண்டு விழா கூட்டத்தை தொடர்ந்து கட்சியில் பல முக்கிய பதவிகளில் மாற்றங்கள் நிகழலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Comments