மலையக மக்களின் அவசர தேவைக்கு தமிழகத்திலிருந்து அடுத்த இரு வாரங்களில் கோதுமை மா | தினகரன் வாரமஞ்சரி

மலையக மக்களின் அவசர தேவைக்கு தமிழகத்திலிருந்து அடுத்த இரு வாரங்களில் கோதுமை மா

மலையக மக்களின் அவசர பயன்பாட்டுக்காக சில மாதங்களுக்கு தேவையான ஒரு தொகை கோதுமை மாவினை அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பா.ஜ.கவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களின் நுகர்வு தேர்வைக்காக சராசரியாக மாதாந்தம் சுமார் ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் கோதுமை மா தேவைப்படுவதாக தெரிய வருகிறது. 

மலையக மக்கள் முன்னணியின் சிரேஷட உப தலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 1) பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை சென்னையிலுள்ள பா.ஜ.க தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார். 

இலங்கைத் தமிழரின் அபிலாசைகளுகேற்ப சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுகள் மற்றும் மலையக மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தொடர்ந்தும் கவனம் செலுத்துமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவிகளை வழங்கி வரும் மத்திய அரசு அடுத்த இரண்டு வாரங்களில் மலையக மக்களின் அவசர பயன்பாட்டுக்காக பெருந்தொகை கோதுமை மா, மருந்து பொருட்கள் மற்றும் பசளை வகைகளையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மலையக மக்கள் மீது விசேட கரிசனையுடன் உள்ளதாகவும் பா.ஜ.க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அண்மையில் இ.தொ.கா தலைவர்களான ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் ஆகியோர் அண்ணமலையை சந்தித்துள்ளதுடன் மலையகம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் அவர் விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Comments