வெளிநாடுகளிலிருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணம் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜூலையில் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 279.5மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன்படி ஜனவரி, ஜூலை 2022க்கான மொத்த பெறுமதி 1,889.4மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்நிலையில் 2022ஆகஸ்டில் உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணம் 325.4மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதனடிப்படையில் 2022ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அனுப்பிய பணத்தின் மொத்த பெறுமதி 2,214.8மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை 2022 ஜூலையில் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் பணம் 2021 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 50% குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.