முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த லஹிரு வீரசேகர திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானை பொலிஸாரால் கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி மருதானை – எல்பின்ஸ்டன் மண்டபமருகே நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறியே அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை அவர் நேற்று ரூ.2 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.