![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/09/25/a3.jpg?itok=mDdIsp2E)
கிழக்கில் சாம்பல் தீவு மற்றும் வடக்கில் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வன பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
விவசாயத்துறை மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அது தொடர்பில் தெரிவிக்கையில்: திருகோணமலை மாவட்டத்தின் ன் சாம்பல் தீவு, வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பிரதேசங்களே வன பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்கள் மாசுபடுவதாகவும் கழிவுகளால் குளங்கள் நிரம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த வகையில் சதுப்பு நிலங்கள் மற்றும் குளம் சார்ந்த உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் மேற்படி பகுதிகளை பாதுகாக்கும் வகையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக விசேட குழு ஒன்றை நியமிக்க வுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், அக் குழுவிடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்