ஸ்கொஷ் போட்டியில் கலந்துகொள்ள இஸ்ரேலிய வீரர்களுக்கு விசா வழங்க மலேசிய அரசு மறுப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஸ்கொஷ் போட்டியில் கலந்துகொள்ள இஸ்ரேலிய வீரர்களுக்கு விசா வழங்க மலேசிய அரசு மறுப்பு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக ஸ்கொஷ் போட்டியில் கலந்துகொள்ள இஸ்ரேலிய வீரர்களுக்கு விசா கொடுக்க முடியாது என்று மலேசியா கூறியுள்ளது. 

ஆண்களுக்கான World Team Championship போட்டி, கோலாலம்பூரில் டிசம்பர் 7ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

ஆனால், மலேசிய அதிகாரிகள் இஸ்ரேலிய வீரர்களுக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றனர். 

அதற்குத் தீர்வுகாண, மலேசியாவின் ஸ்கொஷ் அமைப்பைத் தொடர்புகொண்டுள்ளதாக உலக ஸ்கொஷ் சம்மேளனம் கூறியது. 

விசா அளிக்கப்படாவிட்டால், சுவிட்ஸர்லந்தின் விளையாட்டுக்கான பஞ்சாயத்து மன்றத்திற்குச் செல்லத் திட்டமிடுவதாக இஸ்ரேலிய ஸ்கொஷ் அமைப்பு சொன்னது. 

அந்தப் போட்டி தொடக்கத்தில் நியூஸிலந்தில் நடக்கவிருந்தது. 

ஆனால், அங்குக் கிருமித்தொற்று தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்ததால் போட்டி மலேசியாவிற்கு மாற்றப்பட்டது. 

மலேசியாவில் பலஸ்தீனர்களுக்கு அதிக ஆதரவு உண்டு. 

இஸ்ரேலியக் கடப்பிதழ் வைத்திருப்போர் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Comments